2025 ஜூலை 23, புதன்கிழமை

கிணற்றிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி திருவையாறு பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து வயோதிப்பெண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த சண்முகநாதன் செல்லம்மா (71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண் திருவையாற்றிலுள்ள தனது வீட்டினைப் பார்ப்பதற்கு அடிக்கடி செல்வதாகவும்; சனிக்கிழமை அந்த வீட்டில் தங்கியிருந்ததாகவும்; தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலயே அவருடைய சடலம் கிணற்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரணவிசாரணை அதிகாரி கே.திருலோகமூர்த்தி சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சடலம் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சவச்;சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .