2025 ஜூலை 23, புதன்கிழமை

வீதிகள் புனரமைக்கப்படவில்லை என முறைப்பாடு

Kogilavani   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள 71 கிராமங்களின் 171 வீதிகள் புனரமைக்கப்படாத நிலையில் இருப்பதினால் அவ் வீதிகளினூடாக பயணிக்க முடியாதிருப்பதாக அக்கிராம மக்கள் மாந்தை கிழக்கு பிரதேச சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

15 கிராம அலுவலர்களைக் கொண்ட மேற்படி கிராமங்களில் 2698 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமங்களில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான 185 வீதிகளும், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 9 வீதிகளும் காணப்படுகின்றன. இவற்றில் பிரதேச சபைக்குச் சொந்தமான 23 வீதிகள் மட்டும் புனரமைக்கப்பட்டுள்ளன.

தற்போது மழைகாலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், மேற்படி வீதிகள் மிகவும் மோசமான நிலையில் குன்றும்குழியுமாகக் காணப்படுதினால் மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .