2025 ஜூலை 23, புதன்கிழமை

பொன்தீவுக்கண்டல் மக்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் சந்திப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பொன்தீவுக்கண்டல் கிராமத்தில் மீள்குடியேறுவதற்காக  காத்திருக்கும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அந்த மக்களைச் சந்தித்துக்  கலந்துரையாடியுள்ளார்.

பூவரசன்குளம் பகுதியில்  தங்கியிருந்துவரும் 47 முஸ்லிம் குடும்பங்கள் பொன்தீவுக்கண்டல் கிராமத்தில் மீள்குடியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.

வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  மேற்படி மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில்ச் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியூதினின் வேண்டுகோளுக்கு அமையவே  இக்கலந்துரையாடல்  நடைபெற்றது.

இந்நிலையில், அடிப்படை வசதிகள் தொடர்பில் இம்முஸ்லிம் மக்களுடன் வடமாகாணசபை உறுப்பினர்   றிப்கான் பதியுதீன் கலந்துரையாடியுள்ளார்.  இதன்போது தங்குமிடம், ஜீவனோபாயம், சுகாதார வசதி உள்ளிட்டவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இம்மக்கள் எதிர்நோக்கும்; பிரச்சினைகள் தொடர்பில் நானாட்டான் பிரதேச செயலகம், முஸ்லிம் எயிட் நிறுவனம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடனும் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளதாக  வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .