2025 ஜூலை 23, புதன்கிழமை

கொலைச் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்ணகி நகரில் குடும்பஸ்தர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யபட்ட சந்தேகநபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.

மேற்படி பிரதேசத்தில் இம்மாதம் 7ஆம் திகதி மரக்காலையில் வேலை செய்துவரும் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு நால்வர் விடுதலை செய்யப்பட்டதுடன், ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார். அதன்போது நீதிபதி சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (23) மேற்படி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பொலிஸாரினால் நீதிமன்றத்தில் கொலைக்கான சான்றுப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதன்போது, நீதிபதி எம்.ஐ.வகாப்தீன் மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி...


வயோதிபர் கொலை; ஐவர் கைது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .