2025 ஜூலை 23, புதன்கிழமை

'காவிய பிரதீப்' விருது பெற்ற இரு வன்னிக் கவிஞர்கள்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தேசிய ஒற்றுமைக்கான இலங்கை கவிஞர்களின் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட 24ஆவது விருது வழங்கும் நிகழ்வில் வன்னியைச் சேர்ந்த இரு இளம் கவிஞர்களுக்கு காவிய பிரதீப் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு நேற்று (22) கொழும்பு 7இல் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கடந்த காலப்பதிவுகளை வெளிப்படுத்திய வன்னியூர் சு.செந்தூரன் எழுதிய 'நிலாவைத் தேடும் வானம்' என்ற கவிதை நூலுக்கு யோ.புரட்சி எழுதிய 'இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயராத நாய்' என்ற கவிதை நூலுக்குமே இந்த விருதுகள் கிடைத்துள்ளன.

மேற்படி விருது வழங்கும் நிகழ்வு வருடாவருடம் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .