2025 ஜூலை 23, புதன்கிழமை

ஆனந்தசங்கரி தொடர்பில் பதிலளிக்க முடியாது: சம்பந்தன்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தொடர்பான  ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் வவுனியா கலாசார மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஆனந்தசங்கரி தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பில் இல்லை என்று ஊகங்களும் செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றது. உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீங்கள் நிபந்தனையுடன் ஜனாதிபதியின் சந்திப்புக்கு செல்லமுடியும் என தெரிவித்திருந்தீர்களே. இன்று மாறுபட்ட  கருத்தை தெரிவிக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது,

சம்பந்தனோ, விக்னேஸ்வரனோ இந்த விடயம் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே கட்சி கூடி இன்று நாடாளுமன்றக்குழுவில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது. கட்சியினுடைய முடிவே எங்களுடைய முடிவு ஆகும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

இரணைமடு நீர்த்திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் கேட்டபோது,

இந்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சில முயற்சிகளை மேற்கொள்கின்றார். ஒரு நிபுணர் குழுவை நியமித்து அதன் ஊடாக ஒரு அறிக்கையைப் பெறவுள்ளார். அந்த  அறிக்கை வந்த பின்னர் மேலதிகமாக பேச்சுக்கள் இடம்பெற்று முடிவெடுக்கப்படும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .