2025 ஜூலை 23, புதன்கிழமை

வட்டக்கச்சி பொதுநூலகக் கட்டிடம் அமைக்க நிதி தேவை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, வட்டக்கச்சி பொதுநூலகத்திற்கு புதிய கட்டிடத்தொகுதியொன்று அமைப்பதற்கு 05 மில்லியன் ரூபா  நிதி தேவைப்படுவதாகவும் இதனை  பெற்றுத்தருமாறும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் கீழ் இயங்கும் இந்த நூலகத்தின் கட்டிடம் கடந்த யுத்தத்தின்போது, முற்றாகச் சேதமடைந்தது. இதனால், இந்த நூலகம் தனியார் ஒருவரின் கட்டிடத்தில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி தற்போது இயங்கி வருகின்றது.

தனியார் ஒருவரின் கட்டிடத்தில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி  இயங்கிவரும் இந்த நூலகத்தை  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாளாந்தம்  பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, இந்த நூலகத்திற்கு புதிய கட்டிடத்தொகுதியொன்று அமைத்து, நூலகத்திற்குரிய வசதிகள் செய்வதற்கு 05 மில்லியன் ரூபா நிதியினை ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .