2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியாவில் வியாபாரச் சந்தை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், வவுனியா பிரதேச செயலகத்தில்  வியாபாரச் சந்தையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வவுனியா பிரதேச செயலகத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த வியாபாரச் சந்தையில் வவுனியா மக்களின் பல்வேறுபட்ட  உற்பத்திப் பொருட்களான மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகள், தைத்த ஆடைகள், பனையோலை உற்பத்திகள், யோக்கட்டுக்கள் உள்ளிட்ட பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டன.

இவ்வாறு சந்தை வாய்பை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பதுடன், விற்பனைத் துறையின் நுட்பங்களையும் கிராம மக்கள் கற்றுக்கொள்ளுவதற்கு வாய்ப்புக்  கிடைக்கும் எனவும்  வவுனியா பிரதேச செயலளார் க.உதயராசா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .