2025 ஜூலை 23, புதன்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்துக்கு புதிய செயலகம்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிட நிர்மாணப் பணிகள்  நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், இக்கட்டிடத்தொகுதி எதிர்வரும் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் திறந்து வைக்கப்படும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று (26) தெரிவித்துள்ளார்.

இக்கட்டிடத் தொகுதி நிர்மாணிப்பதற்காக அரசினால் 165 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டிடத் தொகுதி 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிர்மாணித்து முடிப்பதற்கு திட்டமிட்டிருந்த போதும், இது எதிர்வரும் 2014ஆம் மார்ச் மாதமளவில் முடிவடையும் என அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்திலுள்ள மற்றைய செயலகங்களை விட கிளிநொச்சி மாவட்ட செயலகம் நவீன வசதிகளுடன் புதிய மாதிரி வடிவத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. யுத்தத்தினால் கிளிநொச்சி மாவட்ட செயலகம் அழிவடைந்த நிலையில், தற்போது புதிய கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .