2025 ஜூலை 23, புதன்கிழமை

கறைத்துறைப்பற்றுக்கு புதிய பிரதேச செயலர்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 26 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திருச்செல்வம் திரேஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மீளவும் அழைக்கப்பட்டமையை அடுத்து உதவி பிரதேச செயலாளார் இ.குருபரன் பதில் பிரதேச செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருச்செல்வம் திரேஸ்குமார் கறைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் திருச்செல்வம் திரேஸ்குமார் இன்று 26ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுடனும்; பிரதேச செயலகத்தின் நிலமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .