2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியா நீதிமன்றத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்
 
வவுனியா நீதிமன்றத்தில் விசரணைக்கு கொண்டுவரப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (26) தப்பியோடியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
 
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்ட சிதம்பரபுரத்தை சேர்ந்த செல்வநாயகம் ரவிக்குமார் என்ற கைதியே நீதிமன்றத்தில் வைத்து தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
தப்பியோடியுள்ள கைதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்திலும் வழக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், கைதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .