2025 ஜூலை 23, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

Super User   / 2014 ஜனவரி 22 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர். ரஸ்மின்

முல்லைத்தீவு, முள்ளியவளை - பொன்நகர் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் முள்ளியவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிரவரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கும்படி முல்லைத்தீவு மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ம.கங்காதரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த  20ஆம் திகதி முள்ளியவளை பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன்போது அந்த பெண்ணிடமிருந்து 28,500 மில்லி லீற்றர் கசிப்பும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண் இதற்கு முன்னரும் இரு தடவைகள் கசிப்பு உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் முறையே 40,000 மற்றும் 10,000 ரூபா நீதிமன்றில் அபராதம் செலுத்தயுள்ளார் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .