2025 ஜூலை 23, புதன்கிழமை

முயற்சியாண்மையை ஊக்குவிப்பதற்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 23 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் (யு.என்.டி.பி) கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் தொழில் வாய்ப்பற்றுள்ள  18 – 40 வயதிற்கும் இடைப்பட்ட இருபாலாரினதும் முயற்சியாண்மையை ஊக்குவிப்பதற்கான செயலமர்வு நேற்று புதன்கிழமை  நடத்தப்பட்டது.

வடமாகாண வாழ்வாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ச.பி.அமலராசா தலைமையில் நடைபெற்ற செயலமர்வில்;; வியாபார முயற்சியாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட யு.என்.டி.பி இணைப்பாளர் எஸ்.இராஜரட்ணம் வளவாளராக கலந்துகொண்டார்.

இந்தச் செயலமர்வில் யு.என்.டி.பி அலுவலர் எஸ்.செந்தூரன், கரைச்சி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிக்கள அலுவலர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .