2025 ஜூலை 23, புதன்கிழமை

நீதிமன்றத்தில் கைப்பேசியை ஒலிக்கவிட்டவர் தடுத்துவைக்கப்பட்டார்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 23 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, கையடக்கத் தொலைபேசியினை ஒலிக்கவிட்டவரை நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரையிலும் தடுத்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எம்.ஜ.வகாப்தீன், பொலிஸாருக்கு உத்தரவிட்ட சம்பவமொன்று இன்று (23) இடம்பெற்றது.

நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வழக்கினை பார்வையிட்டுக் கொண்டிருந்த மேற்படி நபரின் கையடக்கத் தொலைபேசி திடீரென ஒலித்தமையினால் நீதிமன்றத்தின் அமைதி பாதிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, குறித்த நபரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார், நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது, இன்று பிற்பகல் 3 மணிவரை  அவரைத் தடுத்து வைக்கும்படி பொலிஸாருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .