2025 ஜூலை 23, புதன்கிழமை

அபிவிருத்தி நிலைபெற உளச் சமூகமுள்ள சமூகம் அவசியம்: இமெல்டா

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 24 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


அபிவிருத்தி  நிலைபெறுவதற்கு உளச் சமூகமுள்ள சமூகம் அவசியமானது என சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இதனை நிலைநிறுத்தும் பணியில் இத்தகைய வேலைத்திட்டங்கள், செயலமர்வுகள் உதவுகின்றன எனவும் அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உளச் சமூக  நிலையை மேம்படுத்துவது தொடர்பான செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சமூக சேவைகள் அமைச்சினால் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

எமது பிரதேசங்களில் உளச் சமூக நிலையை மேம்படுத்தும் நோக்குடன் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நீங்கள் சமூகத்தில் நல்ல பணிகளை செய்தல் வேண்டும்.

போர் முடிந்த இம்மண்ணில் இதுபோன்ற தேவைகள் அதிகமாக உள்ளதால் தான், எமது அமைச்சு இத்தகைய வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது எனவும் அவர் கூறினார். 

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் கரைச்சி, பூநகரி, கண்டாவளை, பச்சிலைப்பளை ஆகிய பகுதிகளிலுள்ள முதியோர் மேம்பாட்டுத் தொண்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடும் தொண்டர்கள், குடும்ப புனர்வாழ்வு நிலைய உத்தியோகத்தர்கள், வேள்ட்விஷன் நிறுவன உத்தியோகத்தர்கள் என 75 பேர்  கலந்துகொண்டனர்.

அமைச்சின் தேசிய உளவளத்துணை நிலையத்தின் திட்ட இணைப்பாளர் எம்.எவ்.எம்.அசார், கிளிநொச்சி மாவட்ட உளவளத்துணை அலுவலர் தேவராஜா துஸ்யந்தன், வவுனியா கணேசபுரம் ஐயனார் வித்தியாலய ஆசிரியர் எஸ்.சுதன், மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரன், மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சம்மேளன தலைவர் தி.சிவமாறன், மாவட்ட முதியோர் அபிவிருத்தி பேரவையின் தலைவர் இ.புவனேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .