2025 ஜூலை 23, புதன்கிழமை

மனித புதைகுழியை பார்வையிட செல்வம் எம்.பி.க்கு அனுமதி மறுப்பு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 24 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக அவ்விடத்திற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித புதைகுழி தோண்டும் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்ட போது பல அரசியல்வாதிகள் அங்கு சென்று பார்வையிட்டு வந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவ்விடத்திற்கு சென்ற போது பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வருகை தொடர்பில் பொலிஸாரினால் நீதவானிடம் தெரியப்படுத்திய போதும் நீதவான் அரசியல்வாதிகளுக்கான அனுமதியை வழங்க வில்லை. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திருப்பி அனுப்பப்பட்டார்.

இதேவேளை கடந்த வாரம் குறித்த மனித புதைகுழி பகுதிக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி என்.குணசீலனுக்கும் புதைகுழியை பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு அவரும் திருப்பி அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .