2025 ஜூலை 23, புதன்கிழமை

மக்களை அச்சுறுத்தி பணம் பறித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

Super User   / 2014 ஜனவரி 26 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

மக்களை அச்சுறுத்தி பணம் பறித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வவுனியா பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொஸிஸ் உத்தியோகஸ்தரை எதிர்வரும் எழாம் திகதி வரை வளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா பதில் நீதிபதி எம்.சிற்றம்பலம் உத்திரவிட்டுள்ளார்.

வவுனியா பஸ் நிலைய பொது மலசலகூட பகுதியில் மதுபோதையில் நின்ற சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர், அங்கு வந்தவர்களிடம் தான் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் எனவும் தனக்கு பணம் தருமாறும் கூறி அச்சுறுத்தியதுடன் அடையாள அட்டைகளையும் சிலரிடம் பறிமுதல் செய்துள்ளார்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மதுபோதையில் மக்களை அச்சுறுத்தி பணம் பெற்றார் என்ற சந்தேகத்தில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அவரிடம் இருந்து பொதுமக்களின் நான்கு அடையாள அட்டைகள் மற்றும் 5,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வவுனியா பதில் நீதிபதி எம்.சிற்றம்பலம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதன்போது அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை வளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .