2025 ஜூலை 23, புதன்கிழமை

கிளிநொச்சியில் காணாமற்போனவர்களின் பெற்றோர்களின் ஒன்றியக் காரியாலயம் திறப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 27 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக தனியார் கட்டிடத்தொகுதியொன்றில் அமைக்கப்பட்ட இறந்த மற்றும் காணாமற்போனவர்களின் பெற்றோர்களின் ஒன்றியக் காரியாலயம் இன்று (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
 
யுத்தத்தினால் மற்றும் இடம்பெயர்வுகளினால் காணாமற்போனவர்களின் உறவினர்கள் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாமலும், தமது வாழ்வாதாரத்தினை கொண்டு நடத்த முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் இவர்களுக்கு உதவும் வகையில் வடகிழக்கு பகுதிகளில் மேற்படி அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
 
அந்தவகையிலேயே கிளிநொச்சிக்கான அலுவலகம் இன்று (27) திறந்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ஆனந்த ஜெயபால, வடமாகாண இணைப்பாளர் வேலுப்பிள்ளை மகேஸ்வரன், கிளிநொச்சி அமைப்பாளர் கோபால் குணாளன் மற்றும் மதத்தலைவர்கள், காணாமற்போனோர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .