2025 ஜூலை 23, புதன்கிழமை

அலவாங்கு தாக்குதல்: ஐவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஜனவரி 28 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இளைஞர் ஒருவரை அலவாங்கினால் குத்தி படுகாயப்படுத்தியதாக கூறப்படும் ஐந்து சந்தேக நபருக்கும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.வகாப்தீன் நேற்று (27) உத்தரவிட்டுள்ளார்.  

வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு மதுபோதையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலையடுத்து இளைஞர் ஒருவர் அலவாங்கினால் தலையில் குத்தி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றைய தினம் (27) மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்;டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சிப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஐவரை நேற்று (27) கைது செய்து நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விசாரணை பூர்த்தியாகாத காரணத்தினால் குறித்த ஐந்து பேரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .