2025 ஜூலை 23, புதன்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த நால்வருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 29 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 04  பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்களை வைத்திருந்த நால்வருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை 85,000  ரூபா தண்டம் விதித்தார்.

கசிப்பு வைத்திருந்த மூவருக்கு தலா 15,000 ரூபா படி 45,000 ரூபாவும் அனுமதிப்பத்திரமின்றி சாராயம் வைத்திருந்த ஒருவருக்கு 40,000 ரூபாவும் அவர் தண்டம் விதித்தார்.

இராமநாதபுரம் மற்றும் மருதநகர் பகுதிகளில்  750 மில்லிலீற்றர் கசிப்பு  வைத்திருந்த இருவரை கடந்த 23ஆம் திகதியும் பன்னங்கண்டி பகுதியில் 750 மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்த ஒருவரையும்  மருதநகர் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சாராயம் வைத்திருந்த ஒருவரையும் கடந்த 26ஆம் திகதியும் கிளிநொச்சி பொலிஸார் கைதுசெய்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .