2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனியாவுக்கு இந்தியக்குழு விஜயம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 30 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்


இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான இந்திய வெளிவிவகார அமைச்சின் விசேட செயலாளர் சுஜாதா மேத்தா தலைமையிலான குழுவினர் வவுனியா மாவட்டத்திற்கான விஜயத்தை  இன்று வியாழக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா, புதுக்குளத்தில் இந்திய வீட்டுத்திட்டங்களை பார்வையிட்ட இவர்கள், வீட்டு உரிமையாளர்களிடம் வீட்டுத்திட்டத்தின் நன்மைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.

மேலும், சாஸ்திரிகூழாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளைச்  சந்தித்து இவர்கள் கலந்துரையாடினர்.

இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலேட் ஜெனரல் வே.மகாலிங்கம், வெளிவிவாகார அமைச்சின் மேலதிக செயலாளர் பினய் குமார், வெளிவிவகார அமைச்சின் நிதி இயக்குநர் அனுராக் சிறிவஸ்ராவா, வெளிவிவாகார அமைச்சின் கீழ்நிலைச் செயலாளர் ஜோன் மாய், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் அதிகாரியான எஸ்.சிறிகாந் ஆகியோர் இக்குழுவில் அடங்கியிருந்தனர்.

இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறி,  வவுனியாவில் நேற்று புதன்கிழமை  வீட்டுத்திட்டம் கிடைக்காத  மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .