2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், திருக்கேதீஸ்வரம் கோவில் இடம்பெறவிருக்கின்ற சிவராத்திரியை முன்னிட்டு மன்னார் மனித புதைகுழியை தோண்டும் பணிகளைதற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இரகசிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து  திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அப்பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை குழி தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

அன்றிலிருந்து கடந்த வெள்ளி வரையும் 55 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டன. யுத்தக்காலத்தில் இந்த இடத்தில் புலிகளின் பிரதான முகாம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மனித புதைக்குழியை தோண்டும் பணிகள் கடந்த 7 ஆம் திகதி நிறுத்தப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும்  தோண்டப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .