2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னார் ஆயர் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசல்பிட்டி கிராமத்திலுள்ள தாருல் ஹிக்கம் அரபுக்கல்லூரி திறப்பு விழாவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசெப்பு ஆண்டகை நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேற்படி அரபுக் கல்லூரியை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் திறந்துவைத்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (2)  நடைபெற்ற இதற்கான நிகழ்வில் உலமாக்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன்,  தாருல் ஹிக்கம் அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி அஸ்ரப் முபாரக் மௌலான ஆகியோர்   நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .