2025 ஜூலை 23, புதன்கிழமை

விரைவில் முல்லைத்தீவு, மூங்கிலாறு வைத்தியசாலை

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் முல்லைத்தீவு, மூங்கிலாறு வைத்தியசாலை விரைவில் அமைக்கப்படுமென  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அமிர்தராஜா திலிபன்  இன்று திங்கட்கிழமை (3) தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு இப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, பொதுச் சேவைக்காக 10 ஏக்கர் காணி வடமாகாண காணித் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்டது.

பின்னர் 2013ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் வடமாகாண காணி ஆணையாளரின்; பரிந்துரைக்கு அமைய மூங்கிலாறு பிரதேசத்தில் புதிய வைத்தியசாலை ஒன்றை  அமைப்பதற்கு  இக்காணி ஒதுக்கப்பட்டது.

தற்போது  இக்காணியில்  சிரமதானப் பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கட்டிடத்தொகுதியை அமைப்பதற்கு ஒப்பந்தக்காரர்களுக்கான விண்ணப்பங்களை விரைவில் கோரவுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலை தற்போது அப்பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார கட்டிடத்தொகுதி ஒன்றில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்;தக்கது.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .