2025 ஜூலை 23, புதன்கிழமை

முல்லைத்தீவில் வைத்திய சேவையை வழங்க வைத்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல், மூங்கிலாறு, அளம்பில், ஐயன்கன்குளம் ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு வைத்தியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதும் வைத்தியர்கள் எவரும் இதுவரை விண்ணப்பிக்கவில்லையென முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அமிர்தராஜா திலிபன் திங்கட்கிழமை(03) தெரிவித்தார்.

 'முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படாத நிலையில் இந்த வைத்தியசாலையை நம்பி வாழ்கின்ற சுமார் 3000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பகுதிக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இதுதொடர்பான மகஜர் ஒன்றினையும் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வடமாகாண சுகாதார அமைச்சுக்கு கையளித்திருந்தனர். இருப்பினும் இதுவரை நிரந்தர வைத்தியர் எவரும் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் இன்று (03) தொடர்பு கொண்டு கேட்டபோது,

'நட்டாங்கண்டல், ஐயன்கன்குளம் ஆகிய வைத்தியசாலைகளுக்கு மல்லாவி வைத்தியசாலை வைத்தியர்களும் மூங்கிலாறு  மற்றும் அளம்பில் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை வைத்தியர்களும் தற்காலிகமாக சேவைகளை வழங்கி வருகின்றனர்.

அத்துடன் மேலதிகமான அவசர நோயாளிகளை பொதுவைத்தியசாலைகளுக்கு மாற்றக்கூடிய வகையில் அம்புலன்ஸ்களும் வழங்கப்பட்டிருக்கின்றது'  என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .