2025 ஜூலை 23, புதன்கிழமை

ஒட்டுசுட்டானை பிரதேச சபையாக உருவாக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் உபசபையாக இயங்குகின்ற ஒட்டுசுட்டான் பிரதேச சபையினைத் தனிப் பிரதேச சபையாக மாற்றுவதற்காக உள்ளுராட்சி அமைச்சிற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பிரேரணை நிறைவேற்றிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்புப் பிரதேச சபைகள் இருக்கின்றன.

இதில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபையானது, புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளையும், ஓட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள 27 கிராம அலுவலர் பிரிவனையும் உள்ளடக்கிய 968 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக் கொண்டதாகும்.

பெருமளவு பிரதேசத்தினை புதுக்குடியிருப்புப் பிரதேச சபை கொண்டிருப்பதினால் பின்தங்கிய கிராமங்களில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை என மக்களினால் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கைக்கு அமைவாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போது, ஒட்டுசுட்டான் பிரதேச சபையாக உருவாக்கப்பட வேண்டும் என என்னால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை உள்ளுராட்சி அமைச்சுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளை உள்ளுராட்சி அமைச்சு மேற்கொள்ளும' அவர் மேலும்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .