2025 ஜூலை 23, புதன்கிழமை

நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு கிளிநொச்சியில் பயிற்சி

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற 21பேருக்கு கிளிநொச்சியில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இன்று முதல் அவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாறு பயிற்சி பெறுபவர்களின் 15பேர் பெண்களாவர். இவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (05) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவர்களில் 10பேர் கரைச்சி பிரதேச செயலகத்திலும், மூவர்; கண்டாவளை பிரதேச செயலகத்திலும், பூநகரி, பளை ஆகிய பிரதேச செயலகத்திற்கு தலா நான்கு பேர் வீதம் ஒரு மாத பயிற்சி நெறிக்காக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகளை உரிய பிரதேச செயலர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளனர்.

இந்நிகழ்வின்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் நடைபெற்ற மீள்குடியமர்வு, அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக விளக்கங்கள் பல்லூடக எறிகருவி மூலமாக இவர்களுக்கு காண்பிக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் செ.ஸ்ரீநிவாசன், பிரதம கணக்காளர் கில்பேட்குணம், திட்டமிடல்  பணிப்பாளர் ச.மோகனபாவன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை ஆகிய பகுதிகளின் பிரதேசசெயலர்களும் ஏனைய திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .