2025 ஜூலை 23, புதன்கிழமை

மன்னாரில் பாவனைக்கு உதவாத உணவுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சுகாதார அமைச்சும் சுகாதாரத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய உணவு வாரத்தை முன்னிட்டு, மன்னார் பஸார் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் புதன்கிழமை (05)  திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை கைப்பற்றியதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.என்.கில்றோய் பீரிஸ் தெரிவித்தார்.

மன்னார் பொதுச் சுகாதார பரிதோசகர் குழுவினர் மேற்கொண்ட இந்தச் சோதனையின்போது போத்தலில் அடைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், நெத்தலிக் கருவாடு, சோயாமீட் பைக்கட்டுக்கள், நூடில்ஸ், ரின் மீன்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கைப்பற்றப்பட்டன. இவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

மேற்படி வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை எச்சரித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், இவ்வாறான சோதனைகள் திடீர், திடீரென்று மேற்கொள்ளப்படும்.  இதன்போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் காணப்படின்  வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.என்.கில்றோய் பீரிஸ்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .