2025 ஜூலை 23, புதன்கிழமை

கரைச்சியில் மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு நியமனம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவின் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 6 உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (05) நடைபெற்றது.

இந்நிகழ்வு கரைச்சி பிரதேச செயலாளர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு இந்நியமனங்களை வழங்கி உள்ளது.

தற்போது கரைச்சி பிரதேச செயலகப் பிரிவின் மத்தியஸ்த சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.

இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ச.பி.அமலராசா, தலைமைப்பீட கிராம அலுவலர் கனகையா மகேந்திரன், கிராம அலுவலர்கள், ஏனைய வெளிக்கள அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கரைச்சி பிரதேச செயலர் உரையாற்றுகையில், 'கரைச்சி பிரதேச செயலகப் பிரிவின் மத்தியஸ்த சபை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் ஆரம்ப பாடசாலையில் கூடி வருகின்றது.

இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் முகமாக இவை இயங்கி வருகின்றன. இதனை மேலும் பலம் சேர்க்கும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .