2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

'நிதியை எவ்வாறு கையாள்வது' செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் 'நிதியை எவ்வாறு கையாள்வது' என்பது தொடர்பான ஒருநாள் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (06) நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிளிநொச்சிக் கிளையின் அனுசரணையில் நடைபெற்ற செயலமர்வில் கிராமிய அபிவிருத்தி வங்கியின் முல்லைத்தீவு மாவட்ட பயனாளிகள்,  இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்ட குழுத் தலைவர் எஸ்.ஸ்ரீ.பத்மநாதன், கிராமிய அபிவிருத்தி வங்கியின் வட பிரதேச முகாமையபளர் எஸ்.கீர்த்திசீலன், கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிளிநொச்சி முகாமையாளர் ஜீ.சற்குணபாலன், கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவநேசராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எவ்வாறு  போலி நாணயங்களை இனங்காண்பது, தொழில்சார் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது, வங்கியில் பெறும் கடனை எவ்வாறு மீளச் செலுத்துவது ஆகியவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .