2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜப்பான் தூதரக ஆலோசகருடன் டெனிஸ்வரன் சந்திப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


ஜப்பான் நாட்டு தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் நவொ கொ குரா மொக்சிக்கும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில்  மன்னார் நகர சபையில் வெள்ளிக்கிழமை (07) விசேட சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட  வடமாகாணத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்  நவொ கொ குரா மொக்சி கேட்டறிந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பில் வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .