2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

Kanagaraj   / 2014 பெப்ரவரி 08 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

இரணைமடு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் வந்தவர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா குட்சட் வீதியினைச் சேர்ந்த கந்தையா ரகுநாதன் (44) என்பவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் இன்று (08) தெரிவித்தனர்.

நேற்று (07) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீதியின் மருங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றதாகவும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற மூன்று வௌ;வேறு விபத்துக்களில் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன், விபத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.கிருஷ;ணராஜா இன்று தெரிவித்தார்.

கிளிநொச்சி முரசுமோட்டை ஏ – 35 வீதியில் நேற்று மாலை துவிச்சர வண்டியில் பயணித்தவரை மோட்டார் சைக்கிள் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பொன்னுத்துரை கந்தசாமி (60) என்பவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி 155 கட்டைப்பகுதியில் ஏ – 9 வீதியில் வீதியில் பயணித்தவரை பாரவூர்தி மோதியதில் பாலசுப்பிரமணியம் கோகுலன் (11) என்ற பாடசாலை மாணவன் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அத்துடன் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் ஊழவு இயந்திரத்தில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தினை ஏற்றிய போது, அது வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பொன்னையா கந்தசாமி என்பவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல் அறுவடை இயந்திர ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

விபத்துக் காரணமானவர்கள் எனக் கைது செய்யப்பட்ட மூவரும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.வாகப்தீனின் வாசஸ்தலத்தில்  ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .