2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வட மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபையை அமைக்க திட்டம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்,றொசேரியன் லம்பேர்ட்


வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து ஒழுங்குகளுக்கான வடக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையொன்றினை உருவாக்குவது தொடர்பாக வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்களுக்கிடையிலான சந்திப்பின்போது யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண போக்குவரத்து அமைச்சரின் 101 நாள் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களுக்கிடையிலான ஒன்றுகூடலொன்று மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலின் போது வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. இதன்போதே மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டது.

இதன்போது வட மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கங்களின் நிர்வாக உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் 5 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள், வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர்  பா. டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், மன்னார் பொலிஸ் தலைமையக பொறுப்பிதிகாரி டபிள்யூ துசார தளுவத்த மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ப.ஜெரோம் எமிலியானும்பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .