2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் மஞ்சள் செய்கை

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக முன்னோடித் திட்டமாக 10 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட  மஞ்சள் செய்கைக்கான அறுவடை இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாக  வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அ.சகிலாபாணு தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் ஆலோசனையுடனான  வழிகாட்டலில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஊடு பயிராகவும் தனியாகவும் மஞ்சள் செய்கை பண்ணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கான நிதியை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபை  வழங்கிய நிலையில்,  ஒவ்வொருக்கும் 15,000 ரூபா படி நாட்டுவதற்கான  மஞ்சள் கிழங்கும் பசளையும்  மொத்தமாக 25 விவசாயிகளுக்கு வழங்கியதாகவும் அவர் கூறினார்.

மஞ்சள் ஏற்றுமதி வாய்ப்பை மையமாகக் கொண்டு இந்தச் செய்கையை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.  இந்த நிலையில், மஞ்சள் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடமிருந்து   மஞ்சளை கொள்வனவு செய்தவற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஒன்பது முதல் 12 மாதச் செய்கையான மஞ்சள் செய்கை குறைவான பராமரிப்புச் செலவுகளுடன் அதிகளவான வருமானம் ஈட்டும் செய்கையெனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

தற்போது இங்கு மஞ்சள்  செய்கை பண்ணப்படுவதால் மலிவாக நுகர்வோர்கள் மஞ்சலை பெறும் வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கூறினர்.

மேலும், மஞ்சள் செய்கை அறுவடையின் பின்னர் சந்தைப்படுத்தலில் தாம் பிரச்சினைகளை எதிர்நோக்கலாம். விவசாயத் திணைக்களம் தங்களிடம் மஞ்சளை கொள்வனவு செய்வதற்கு ஆவண செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.




  Comments - 0

  • kp,karan Sunday, 16 February 2014 02:55 PM

    நல்ல முயற்சி

    Reply : 0       0

    Sakeela banu Sunday, 26 July 2015 10:12 AM

    Thank you

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .