2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் வாடிவீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் வாடிவீட்டின் உரிமையாளரான மாரிமுத்து கதிர்காமராசா (வயது 50 ) என்பவர்  இனந்தெரியாதோரின் தாக்குதலினால் காயமடைந்த நிலையில்; வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா நகர்ப் பகுதியிலிருந்து  தனது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (09)  இரவு சென்ற இவரின் மோட்டார் சைக்கிளுடன்,  இவரது வீட்டுக்கு முன்பாக நின்றவர்கள் வாகனத்தால் மோதினர்.  இது  தொடர்பில் இவர்களிடம்  தாக்குதலுக்குள்ளான நபர் வினவியபோது,  திடீரென இருவர் இவர் மீது கத்தியால் வெட்டியும் தடியால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டதாகவும்  பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில், தாக்குதலுடன்   சம்பந்தப்பட்டவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை  வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .