2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தொழில்நுட்ப பயிற்சிகளை பெறுவதில் விவசாயிகள் ஆர்வமில்லை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் விவசாய தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர்; (விரிவாக்க) எஸ்.செல்வராஜா இன்று (10) தெரிவித்தார்.

அதிகளவு விளைச்சல்களைப் பெறுவதற்குரிய விவசாய முறைகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன. விவசாய தொழில்நுட்பங்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சிகள் பல்வேறு திட்டங்களினூடாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருந்தும் மேற்படி தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் அக்கறை காட்டுவதில்லை. இவ்வாறான பயிற்சிகளில் கலந்துகொண்டு நவீன முறையிலான பயிற்சிகளை மேற்கொண்டு அதன்மூலம் விவசாயிகள் கூடுதலான நன்மையடையும் சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .