2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு ஊர்வலம்

Super User   / 2014 பெப்ரவரி 10 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா அட்டம்பஸ்கட சிறுவர் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி ஊர்வலமொன்று இன்று நடைபெற்றது. வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு முன் ஆரம்பமான குறித்த ஊர்வலம் மணிக்கூட்டு கோபுரம் வழியே பஸார் வீதியை சுற்றி வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.

இந்த ஊர்வலத்தில் 'சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எனது ஆட்சியில் மன்னிப்பே கிடையாது என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியை மையப்படுத்தி அட்டம்பஸ்கட சிறுவர் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களுக்கு நிதி கிடைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள் எதுவிதமான தலையீடுகளுமின்றி நீதித்துறை சுதந்திரமாக செயற்படுத்தலை உறுதிப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும், இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடையூறு விழைவித்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியவர்கள் இனி அவ்வாறு செயற்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தியவாறு ஊர்வலத்தில் பங்கெற்றோர் சென்றிருந்தனர்.

வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பு மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் சமூக ஆர்வலர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் ஊர்வலத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரொன்று வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதனிடம் கையளிக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .