2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிவராத்திரிக்காக திருக்கேதீஸ்வர கோவிலின் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள மகா சிவராத்திரியை முன்னிட்டு மன்னார், திருக்கேதீஸ்வர கோவிலில்  மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் மேற்படி  கோவில் மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (10) கலந்துரையாடப்பட்டன. 

இதன்போது சிவராத்திரி தினத்தன்று திருக்கேதீஸ்வர  கோவிலுக்கான போக்குவரத்துச் சேவை, சுகாதாரம், குடிநீர் மற்றும் உணவு வசதி, தங்குமிடம், பாதுகாப்பு, மருத்துவ வசதி உள்ளிட்ட  விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

மகா சிவராத்திரிக்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அதிகளவான பக்தர்கள் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு வருகை தரவுள்ளதால்,  சகல ஏற்பாடுகளும் துரிதகதியில் மேற்கொள்ளப்பட வேண்டுமென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர கோவில் இணைப்புச் செயலாளர் புலவர் திருநாவுக்கரசு, மன்னார் மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.பரமதாஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பி.டி.சுகதபால, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அரசாங்க மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .