2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகர்களுக்கு அடையாள அட்டைகள்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்திலுள்ள 05 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடமையாற்றுகின்ற 229 சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகர்களுக்கும் 32 சமுர்த்தி முகாமையாளர்களுக்கும் அடையாள அட்டைகளும் அலுவலகப் பைகளும் செவ்வாய்க்கிழமை (11) வழங்கப்பட்டன.

மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய  பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றுகின்ற சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகர்கள்,  சமுர்த்தி முகாமையாளர்களுக்கு இவை வழங்கப்பட்டன.

சமுர்த்தி மற்றும் திவிநெகும திணைக்களத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் ஏற்பாட்டில்  மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிசாட் பதியுதீன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்,  வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் நகரசபை உறுப்பினர் என்.நகுசீன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

இதேவேளை, மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள  05 சமுர்த்தி வங்கிகளுக்கு பிரின்டர் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .