2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துணுக்காயில் மீள்குடியேறிய மக்களின் கணிசமானளவு தேவைகள் பூர்த்தி

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இற்றைவரை மீள்குடியேறிய 3,647 குடும்பங்களின் தேவைகள் கணிசமானளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மேலும், இங்கு இவ்வருட இறுதியினுள்; 456 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் புதன்கிழமை (12) அவர் கூறினார்.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள 20 கிராம அலுவலகர் பிரிவின் கீழுள்ள பிரதேசங்களில் 3,647 குடும்பங்களைச் சேர்ந்த 11,419 பேர் மீள்குடியேறினர்.

இங்கு இதுவரையில் 1,698 புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேப் திட்டத்தின் கீழ் 235 வீடுகளும் யு.என்.கபிரேட் நிறுவனத்தால் 250 வீடுகளும் இந்திய அரசாங்கத்தின்; மாதிரி வீட்டுத் திட்டத்தில் 50 வீடுகளும் யு.எஸ்.ஏ. நிறுவனத்தின் நிதியில் 71 வீடுகளும் இந்திய வீட்டுத் திட்டத்தில் 1,092 வீடுகளும்  நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், யுத்தத்தினால் பகுதியளவில் சேதமடைந்;த 460 வீடுகளும் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக புதிய கிணறுகளை அமைத்தல், ஏற்கெனவே உள்ள கிணறுகளை புனரமைத்தல் ஆகியவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .