2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முல்லையில் கருவாடு கொள்வனவு செய்த சூ

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுவின் ஆசிய பசுபிக் தலைவருமான ஹாவோ சூ, நேற்று (11) முல்லைத்தீவுக்கு பயணித்துள்ளதுடன், அங்கு சுயதொழிலில் ஈடுபட்டு வரும் கள்ளப்பாடு மீனவர்களிடமிருந்து கருவாடு கொள்வனவு செய்துள்ளார்.

அத்துடன், ஐரோப்பியன் ஒன்றியத்தினால் முல்லைத்தீவு, கறைத்துறைப்பற்று, கள்ளப்பாடு பிரதேசத்தில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட ஐஸ் தொழிற்சாலையினையும் ஐ.நா, உதவிச் செயலாளர் நாயகம் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐ.நாவின் மனிதநேய இணைப்பாளரும், யு.என்.டி.பி.யின் வதிவிட பிரதிநிதியுமான சுபி நேந்தி, யு.என்.டி.பியின் இலங்கைக்கான பணிப்பாளர் ரஷீனா பில்கிரமி, யு.என்.டி.பியின் இலங்கைக்கான உதவிப் பணிப்பாளர் கணேஷராஜா, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல உதவித் திட்டங்களை இலங்கை அரசினூடாக செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐ.நா சபையின் உதவிச் செயலாளர் மீனவர்களிடம் தெரிவித்தார்.

ஐரோப்பியன் ஒன்றியத்தினால் குறித்த பிரதேசத்தில் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட ஐஸ் தொழிற்சாலை நாளொன்றுக்கு 5ஆயிரம் கிலோ ஐஸ் கட்டியை தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .