2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு விபத்தில் கண்டி இளைஞன் பலி

Kanagaraj   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் கண்டி, அக்குறனை பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது ஹில்மி (வயது 24) உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் முல்லைத்தீவு நகரில் கடையொன்றை நடத்திவரும் தனது நண்பருடன் முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளதுடன், அவர் முல்லைத்தீவு-முள்ளியவளை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளமையால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .