2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மல்லாவி வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்: அ.திலீபன்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 12 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள மல்லாவி வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக இவ்வருடத்திற்குள் தரம் உயர்த்தப்படவுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அமிர்தராஜா திலீபன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 17 வைத்தியசாலைகள் இருக்கின்றன. இருந்தும் பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சைக்கு வருகின்றவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதிலும் குறிப்பாக நாட்டாங்கண்டல், துணுக்காய், ஐயன்குளம் உள்ளிட்ட வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லை. இந்த வைத்தியசாலைகளுக்கு மல்லாவி வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களைக் கொண்டு வெளிநோயாளர் பிரிவு மட்டும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை (10) பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பலராலும் சுட்;டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், மல்லாவி வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக இவ்வருடத்திற்குள் தரம் உயர்த்தப்படவுள்ளதுடன், அங்கு புதிய வைத்தியர்களும் கடமையாற்றுவதற்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .