2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 13 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியானது 23ஆவது தடவையாகவும்  இன்று வியாழக்கிழமை (13) தோண்டப்பட்டபோது,  ஒரு மனித எலும்புக்கூடு  கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையிலான குழுவினர் மேற்படி  மனித புதைகுழியை  தோண்டும் நடவடிக்கையை இன்றையதினமும் முன்னெடுத்தனர். இந்த நிலையில், இன்றையதினத்துடனான  மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்களின் மொத்த எண்ணிக்கை  62 ஆகும். 

இதேவேளை, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட 04 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் இன்று வியாழக்கிழமை (13) மீட்கப்பட்டு பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவுக்கு அமைய மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  வைத்தியசாலையில் 39 மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் எதிர்வரும் 17ஆம் திகதி   24ஆவது தடவையாகவும் மேற்படி மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளது.

மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராம சேவகர் பிரிவுக்குட்;பட்ட மாந்தைச் சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பாதையிலிருந்து சுமார் 50  மீற்றர் தொலைவிலேயே இந்த மனித எலும்புக்கூடுகள் மற்றும் எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி குறித்த பகுதியில் குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக பணியாளர்கள் வீதிக்கரையில் பள்ளம் தோண்டியபோது  இது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .