2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அம்பியூலன்ஸ் பனையுடன் மோதியது; சாரதிக்கு காயம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

பூநகரி வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்த சாரதியான ரி.நாகராசா (வயது 46) என்பவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். 

கிளிநொச்சியிலுள்ள  பிராந்திய சுகாதாரத் திணைக்களத்திற்கு கடமையின் நிமித்தம் சென்று திரும்பிக்கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டியின் பாகமொன்று உடைந்து  பனை மரத்துடன்  மோதியதாகவும் பொலிஸார் கூறினர். 

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .