2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கொக்கிளாயில் இந்திய வீட்டுத்திட்டத்துடன் தமிழர் காணிகளை அபகரிக்கத் திட்டம்: ரவிகரன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

கொக்கிளாய் முகத்துவாரப்பகுதியில் இந்திய வீட்டுத்திட்டத்துடன் சேர்த்து தமிழர் காணிகளை அபகரிக்கும் திட்டமுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கொக்கிளாய் முகத்துவாரப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை மேலும் அபகரித்து இந்திய வீட்டுத்திட்டத்தையும் வழங்கும் நோக்கம்  நடைமுறைப்படுத்தும் சாத்தியம் குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தே சிங்கள மீனவர்கள், கொக்கிளாய் பகுதியின் மீன்பிடி காலத்தின்போது தெற்கில் இருந்து வந்து கடற்றொழிலை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 1983க்கு முன்பு சுமார் 15 குடும்பங்கள் அங்கு இருந்தபோதும், மாதிரிக் கிராமம் என்கிற பெயரில் தமிழரின் காணிகளை அபகரித்து அரசியல்வாதிகளின் துணையுடன் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தன.

இப்போது இன்னும் சில காணிகளை எடுத்து, தற்போது அங்கு இருக்கும் சுமார் 250 இற்கும் மேற்பட்ட பெரும்பான்மையின மீனவ குடும்பங்களுக்கு,  இந்திய வீட்டுத்திட்டத்துடன் கொடுக்கும் முயற்சி திரைமறைவில் நடப்பதாக  காணி உரிமையாளர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். இது தம்முடைய அறுதி உறுதிக் காணிகள் என மேற்படி காணி உரிமையாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்'என்றார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .