2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

யாழ். முனியப்பர் கோவில் முன்றலில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (15) நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு வழங்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'
காணாமல் போனவர்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுதலை வலியுறுத்தியும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், நில அபகரிப்பை தடுத்துநிறுத்துதல், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் உட்பட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு வழங்குவதுடன்,  அனைத்து மக்களையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அம்மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதை தடுப்பதற்கான கடும் முயற்சிகளும்  மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், மக்கள் அரசினதும் இராணுவத்தினதும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டமென்பதுடன், அவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறாது போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டம் வெற்றிகரமாக இடம்பெற ஒத்துழைக்குமாறும் மக்களை கேட்டுக்கொள்கின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .