2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் பயிர்ச் சிகிச்சை முகாம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா விவசாய விரிவாக்கல் பிரிவு அலுவலகத்தில் பயிர்ச் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

இதன்போது பல பிரதேசங்களிலிருந்தும் வந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கையில் புழுக்களின் தாக்கம், பயிர்கள் திடீரென வாடுதல், பூச்சிகளின் தாக்கம், நெற்செய்கையில்  புதிய வகையான புல் வளருதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொண்டனர்.

வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவு மாகாண  பிரதிப் பணிப்பாளர் அ.சகிலாபாணு தலைமையில் நடைபெற்ற இந்தச் சிகிச்சை முகாமில் விவசாயப் போதனாசிரியர்கள்,  விவசாயம் மற்றும் விற்பனை கற்கை நிலையத்தின் வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .