2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அனுமதியின்றி சிலாகைகளை ஏற்றிச்சென்றவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அனுமதியின்றி 150,000 ரூபா பெறுமதியான பனைமரச் சிலாகைகளை பாரவூர்தியொன்றில் ஏற்றிச்சென்றதாகக் கூறப்படும்  சாரதியை கைதுசெய்ததுடன்,  பனைமரச் சிலாகைகளை கைப்பற்றியதாகவும்  புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ -35 வீதி வழியாக பரந்தனிலிருந்து  புதுக்குடியிருப்புப் பகுதிக்கு வியாழக்கிழமை (13) சென்றுகொண்டிருந்த பாரவூர்தியை, போக்குவரத்துக் கடமையிலிருந்த பொலிஸார் மறித்துச் சோதனையிட்டனர். இதன்போது அனுமதியின்றி பனைமரச் சிலாகைகளை ஏற்றிவந்தமை தெரியவந்ததாகவும்  பொலிஸார் கூறினர்.

சாரதியை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .