2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியா சேமமடு மக்கள் - த.தே.ம.மு. சந்தித்து கலந்துரையாடல்

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்கு, சேமமடு பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் சமகால அரசியல் நிலவரம் குறித்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் சேமமடு பிரதேச மக்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (14.2) மாலை சேமமடுவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அப்பிரதேச மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு தெளிவுபடுத்தியதுடன் சமகால அரசியலில் தாம் எவ்வாறு உள்ளோம் என்பதையும் கூறியுள்ளனர்.

இவ்விடயங்களினை கேட்டறிந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனியினாரால் மக்களுக்கு சில தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக அதன் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், அக்கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், அக் கட்சியின் மனிதபிமான பிரிவைச் சேர்ந்த என்.ரஜீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .